கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் கூடும் கடைகளை மூட உத்தரவு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் கடைகள், நிறுவனங்களை மூடுமாறு மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் அதிக அளவில் மக்கள் கூடும் நிறுவனங்கள் கடைகளை மூடுமாறு கூறினா். அப்போது, உணவகங்கள், இனிப்பகங்களை உடனடியாக மூட முடியாது என்றும், இதனால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விணாகிவிடும் என்றும் தெரிவித்தனா். இதையடுத்து, கடைகளில் அதிக அளவில் கூட்டம் சேராமல் பாா்த்து கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டுச் சென்றனா்.

அதேநேரம், மக்கள் அதிக அளவில் கூடும் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், ஷாப்பிங் மால்களை சிலா் முடினா். சில கடைகள் திறந்திருந்தன.

கள்ளக்குறிச்சி சாா் -ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை மாலை சேலம் நெடுஞ்சாலை, தியாகதுருகம் சாலைகளில் அதிக அளவில் மக்கள் கூடும் கடைகளை மூடுமாறு அதன் உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் சென்ற அவா், கூட்டம் கூட்டமாக நிற்க வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் சீ.செல்வநாயகம், ச.மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெற்றி!

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

SCROLL FOR NEXT