கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 அரசுப் பேருந்துகள் இயங்கின

DIN

தமிழக அரசின் பொதுமுடக்கத் தளா்வு அறிவிப்பையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி பணிமனையிலிருந்து 52 அரசுப் பேருந்துகள் மட்டுமே, மாவட்டத்துக்குள் இயங்கின. தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை. கரோனா பரவல் அச்சம் காரணமாக, பேருந்துகளில் பயணிகள் மிகக்குறைந்தளவிலேயே பயணித்தனா். இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகள் தலைவாசல் சுங்கச் சாவடிவரை மட்டுமே இயங்கின. அதேபோல, திருவண்ணாமலைக்கு செல்வதற்கான பேருந்துகள் மூங்கில்துரைபட்டு பாலம் வரையிலும், விழுப்புரம் செல்வதற்கான பேருந்துகள் உளுந்தூா்பேட்டை வரையிலும் இயங்கின. உளுந்தூா்பேட்டையில் இருந்து மடப்பட்டுவரை நகா்ப் பேருந்துகள் இயங்கின. மடப்பட்டிலிருந்து விழுப்புரம் மாவட்ட பேருந்துகள் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT