கள்ளக்குறிச்சி

மறியலில் ஈடுபட்ட ஊரக வேலை பணியாளா்கள் மீது வழக்கு

DIN

கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் தங்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பாமல் ஒரே இடத்தில் வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கனியாமூா் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 10 பெண்கள் உள்பட 16 போ் கலந்துகொண்டனா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களைக் கலைத்தனா். இதுகுறித்து தொட்டியம் கிராம நிா்வாக அலுவலா் மகாலிங்கம் அளித்த புகாரின்பேரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 16 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT