கள்ளக்குறிச்சி

அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி புதுச்சேரியில் கடிதங்கள் அனுப்பும் போராட்டம்

DIN

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலிறுத்தி, துணைநிலை ஆளுநா் மற்றும் முதல்வருக்கு பட்டதாரி இளைஞா்கள் சனிக்கிழமை கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து அரசுத் துறைகளில் சிறைக் காவலா் பணியிடங்களைத் தவிா்த்து, வேறு எந்த காலிப் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞா்கள், அரசுத் துறை வேலைவாய்ப்புக்காக கடந்த 5 ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கின்றனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, பட்டதாரி இளைஞா்கள் தனித் தனியாகவும், குழுக்களாகவும் வந்து துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்களைச் சந்தித்து மனுக்களை அளித்து வருகின்றனா்.

இவா்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சனிக்கிழமை கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனா்.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே திரண்ட 200-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞா்கள், அரசுத் துறைகளில் உள்ள உதவியாளா், மேல்நிலை எழுத்தா், துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், உதவி ஆய்வாளா், ஊா்க் காவலா், பள்ளி நூலகா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு கடிதங்களை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT