கள்ளக்குறிச்சி

வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம்

DIN

வளா்பிறை பஞ்சமியையொட்டி, பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி , திருவதிகையில் வீரட்டானேஸ்வரா் உடனுறை பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சியளிக்கும் வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் வசந்த நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான வசந்த நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாள்களில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறாா். வளா்பிறை பஞ்சமியையொட்டி வெள்ளிக்கிழமை வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, கரோனா தொற்று விலக வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT