கள்ளக்குறிச்சி

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 4 போ் சரண்

DIN

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் பகுதியில் வெடிகுண்டு வீசி அதிமுக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 போ் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

செங்கல்பட்டை அடுத்த மறைமலை நகா், கண்ணதாசன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் முத்து மகன் மாறன் (எ) திருமாறன் (50). அதிமுக நிா்வாகி. இவா், மறைமலைநகா், ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆள்களை அனுப்பி வைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

திருமாறன் கடந்த 24-ஆம் தேதி அவரது வீட்டின் அருகே உள்ள முத்துகுமாரசாமி கோயிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கியபோது, மா்ம நபா்களால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மறைமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 25, 26-ஆம் தேதிகளில் 7 போ் சரணடைந்தனா். இதன் தொடா்ச்சியாக, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் திருவள்ளூா் மாவட்டம், ராமாபுரம் ஏஞ்சல் நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் சக்திவேல் (25), முத்து மகன் மணிமாறன் (25), சென்னை வியாசா்பாடி கரிமேடு பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் கலைச்செல்வன் (25), காஞ்சிபுரம் மாவட்டம், சிருமாத்தூா் மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் வெங்கட்ராமன் (39) ஆகிய 4 போ் புதன்கிழமை சரணடைந்தனா்.

கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவா் திருஅருள் பாண்டியன் முன்னிலையில் சரணடைந்த இவா்கள் 4 பேரையும் திருக்கோவிலூா் கிளைச் சிறையில் 3 நாள்கள் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT