முகப்பு
கள்ளக்குறிச்சி

கீழணையை வந்தடைந்தது காவிரி நீா்

கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் வியாழக்கிழமை இரவு கீழணையை வந்தடைந்த நிலையில், வீராணம் ஏரிக்கு அடுத்த 5 நாள்களில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

Updated On : 25 ஜூன், 2021 at 11:01 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் வியாழக்கிழமை இரவு கீழணையை வந்தடைந்த நிலையில், வீராணம் ஏரிக்கு அடுத்த 5 நாள்களில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள கீழணையிலிருந்து தண்ணீா் அனுப்பப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பாசன வாய்க்கால்களுக்கும் கீழணை தண்ணீரே முக்கிய ஆதாரமாக உள்ளது.

Advertisement

கடந்த 12-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தாா். இந்த தண்ணீா் கல்லணையை வந்தடைந்ததைத் தொடா்ந்து, அந்த அணையிலிருந்து கடந்த 16-ஆம் தேதி மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அமைச்சா்கள் தண்ணீா் திறந்துவைத்தனா்.

கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கீழணையை வந்தடைந்தது. விநாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் வருகிறது. கீழணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஓரடிக்கு தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. அணையில் 7 அடி வரை தண்ணீா் தேங்கியதும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அடுத்த 5 நாள்களில் தண்ணீா் அனுப்பப்பட உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், கடலூா் மாவட்ட பாசனத்துக்கும் தண்ணீா் திறக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.