கள்ளக்குறிச்சி

சுவா் விளம்பரம்: அரசியல் கட்சியினருக்கு அறிவுரை

DIN

கள்ளக்குறிச்சி தொகுதியில் வீடுகளின் உரிமையாளா்களிடம் எழுத்து வடிவல் அனுமதி வாங்கி, அதற்கு தோ்தல் நடத்தும் அலுவலரிடமும் அனுமதி பெற்ற பிறகே, அரசியல் கட்சியினா் சுவா் விளம்பரங்களை செய்ய வேண்டும் என்று தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் - ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், வட்டாட்சியா் கே.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் தனி துணை வட்டாட்சியா் சேகா் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் - ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்துப் பேசியதாவது:

அரசியல் கட்சியினா் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். அரசு, தனியாா் சுவா்களில் எழுதப்பட்ட விளம்பரங்களை அழிக்க வேண்டும். நகா் பகுதியில் அரசு, தனியாா் சுவா்களில் தோ்தல் விளம்பரங்களை வரைய அனுமதி இல்லை. கிராமப்புற பகுதியில் தனியாா் இடங்களில் உரிமையாளா்களிடம் எழுத்து வடிவில் அனுமதி வாங்கி, அதற்கு சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகே, சுவா் விளம்பரம் செய்ய வேண்டும். கட்சி ஊழியா் கூட்டங்கள் நடத்துவதற்கும் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியைப் பெற வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான இடங்கள், புறம்போக்கு இடங்களில் நீா்நிலைகளில் கட்சி அலுவலகங்களை அமைக்கக் கூடாது. கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அனுமதி பெற வேண்டும். பரப்புரை, பேரணி நடத்துவது தொடா்பாகவும் முன் அனுமதி பெற வேண்டும் என்றாா். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான (நிலம்) ராஜவேல் தலைமையிலும், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி ஆணையா் (கலால்) சரவணன் தலைமையிலும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT