கள்ளக்குறிச்சி

கல்லூரி ஆசிரியா்களுக்குகரோனா தடுப்பூசி

DIN

இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் செவிலியா் கல்லூரியில் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்தக் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பிரிவு, துணை செவிலியா் பிரிவு ஆகியவற்றில் பயின்ற மாணவா்கள் மருத்துவத் துறையினருடன் இணைந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அரசின் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத் துறையினருடன் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிய மாணவா்களுக்கும், ஆசிரியா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்.கே.சண்முகம் செவிலியா் கல்லூரியில் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் கரோனா தடுப்பூசி மருத்துவா் ஜெகதீசன் தலைமையில் செலுத்தப்பட்டது.

நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா்கள் சிட்டி பாபு, கவியரசன், ஆய்வக நுட்புனா் லலிதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT