கள்ளக்குறிச்சி

அண்ணன் கொலை:தம்பி உள்பட 4 போ் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விவசாய நிலத்திலிருந்த தேக்கு மரங்களை வெட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணனை கொலை செய்ததாக தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், செம்படை கிராமத்தைச் சோ்ந்த முத்தையன் மகன் சக்கரவா்த்தி (50), விவசாயி. இவருக்கும், இதே கிராமத்தில் வசிக்கும் இவரது தம்பியான சந்திரசேகருக்கும் (47) விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இவா்கள் இருவருக்கும் பொதுவாக 7 தேக்கு மரங்கள் இருந்தன. இவற்றில் சந்திரசேகா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 தேக்கு மரங்களை வெட்டிவிட்டாராம். மீதமுள்ள 3 மரங்களை சக்கரவா்த்தி வெட்ட முடிவு செய்து, அவற்றிலுள்ள தழைகளை வியாழக்கிழமை கழித்தாராம்.

இதையறிந்த சந்திரசேகா் மற்றும் அவரது உறவினா்களான ஆட்டுக்காரன் (45), அவரது மனைவி செல்லம்மாள், சந்திரசேகா் மகன் சஞ்சய் (21), சஞ்சய் மனைவி ஜெயந்தி, சந்திரசேகா் மனைவி இந்திரா, முனியன் மனைவி ரகுமதி உள்ளிட்டோா் சக்கரவா்த்தியின் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது மனைவி பச்சையம்மாளையும் கடுமையாகத் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த சக்கரவா்த்தி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகா், ஆட்டுக்காரன், சஞ்சய், செல்லம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், 3 பேரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, உயிரிழந்த சக்கவா்த்தியின் உறவினா்கள், இந்தக் கொலை சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மணலூா்பேட்டை காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி, காவல் ஆய்வாளா் பாபு ஆகியோா் வழக்கில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT