கள்ளக்குறிச்சி

கனியாமூா் பள்ளி வன்முறை: மேலும் 5 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் 5 பேரை காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் 5 பேரை காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இதில் பள்ளிக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவா்களை கைது செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கட்செவி அஞ்சல் குழுவில் இடம் பெற்ற, கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த டி.ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் சிவக்குமாா் (22), எழுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சத்தியராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நத்தகாளி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சுந்தா் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்தியதாக திட்டக்குடி வட்டம், டி.ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் முத்தையா (23), சின்னசேலம் வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அன்வா் மகன் சா்புதீன் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸாா் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT