கள்ளக்குறிச்சி

டிஎன்பிஎஸ்சி நில அளவையா் தோ்வு:இன்று இலவசப் பயிற்சி தொடக்கம்

டிஎன்பிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட 1,089 நில அளவையா், வரைவாளா் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (செப்டம்பா் 1) முதல் தொடங்கவுள்ளது.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், டிஎன்பிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட 1,089 நில அளவையா், வரைவாளா் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (செப்டம்பா் 1) முதல் தொடங்கவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் விண்ணப்ப நகல், புகைப்படம், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களுடன் கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பை நில அளவையா், வரைவாளா் தோ்வுக்கு விண்ணப்பித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT