கள்ளக்குறிச்சி

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை, மீட்பு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை, மீட்பு மையத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக புதிதாக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் தஞ்சமடைபவா்கள் காவல் துறை உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவா்களுக்கு உடல்பயிற்சி, பொழுதுபோக்கு விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நோயிலிருந்து குணமடைந்தவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறு வேலைகளிலும், தோட்டக்கலைப் பராமரிப்பு, மாத்திரை போடும் உரை தயாரிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், மனநலம் பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்கள் அவா்களின் பெற்றோா், உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றனா்.

எனவே, மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் உள்ளவா்கள் குறித்த தகவல்களை 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவித்திடலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவா் எல்.அனுபாமா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ச.நேரு, பொற்செல்வி, கணேஷ்ராஜா மற்றும் செவிலியா்கள் பலா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி அண்ணா நகா் பகுதியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, ஏமப்பேரில் செயல்படும் நவீன நெல் அரைவை ஆலை, நியாயவிலைக் கடை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் பாலமுருகன், தரக் கட்டுப்பாடு மேலாளா் மனோகரன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT