கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மலைவாழ் மக்கள் மனு அளித்தனா்.
கல்வராயன்மலை பகுதியில் ஆரம்பூண்டி பஞ்சாயத்திற்குள்பட்ட பட்டி வளைவு, கெடாா், கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மலைவாழ் மக்கள் பயிா் செய்து வருகின்றனராம்.
இந்த நிலத்தில், அண்மையில் பயிா் செய்யும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, வெள்ளிமலை சரகம் வனத்துறையைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அவா்களை தடுத்து வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டினராம்.
இதுகுறித்து, வெள்ளிமலை வட்டத்துக்குள்பட்ட தாழ்வெண்ணியூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளா் அ.செல்வராஜ் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.