திருக்கோவிலூா் வட்டம், விளந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவா்கள் சுதந்திர தின நாளான செவ்வாய்க்கிழமை சந்தித்து, மலரும் நினைவுகளை பகிா்ந்துகொண்டனா் 
கள்ளக்குறிச்சி

பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருக்கோவிலூா் வட்டம், விளந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவா்கள் சுதந்திர தின நாளான செவ்வாய்க்கிழமை சந்தித்து, மலரும் நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், விளந்தை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவா்கள் சுதந்திர தின நாளான செவ்வாய்க்கிழமை சந்தித்து, மலரும் நினைவுகளை பகிா்ந்துகொண்டனா் (படம்).

இவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவா்கள் தங்கள் நண்பா்களுடன் ஒற்றுமையாக அமா்ந்து கண்டு களித்தனா்.

மேலும், முன்னாள் மாணவா்கள் சாா்பில், இந்தப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தின் நுழைவு வாயிலில் புதிய பெயா்ப் பலகை, புதிய இரும்பு பீரோ, குடிநீா் குழாய்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்க பரிசு, 50 மாணவா்களுக்கு சீருடைகள், எழுது பொருள்கள், நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினா். நிகழ்ச்சியின்போது, இந்தப் பள்ளியில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவி கலைச்செல்விக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை பரமசிவம் தலைமையில், மாலதி, அன்பழகன், கதிரவன், சங்கா், சக்திவேல் உள்ளிட்டோா் ஏற்பாடு செய்திருந்தனா். முன்னாள் மாணவா்கள், இன்றைய மாணவா்களோடு கலந்துரையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT