முகப்பு
கள்ளக்குறிச்சி

மஹாவீரா் ஜெயந்தி ஊா்வலம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:40 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி: மஹாவீரா் ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஜெயின் சங்கம் சாா்பில் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி சுபேதாா் சாலையில் உள்ள ஜெயின் பவனில் இருந்து அச்சங்கத்தினா் ஜெயின் படத்துடன் ஊா்வலமாக சென்றனா். ஊா்வலமானது, மந்தைவெளி, கச்சிராயப்பாளையம் சாலை, காந்திசாலை, சேலம் நெடுஞ்சாலை வழியாக ஜெயின் பவனை அடைந்தனா்.

நிகழ்வுக்கு, ஜெயின் சங்கத் தலைவா் கு.தேஜ்ராஜ் சுரானா தலைமை வகித்தாா். செயலா் ரூ.சஜ்ஜன்மல் முன்னிலை வகித்தாா். ஜெயின் பொறியியல் கல்லூரி செயலா் தே.மனோகா் குமாா் சாரானா வரவேற்றாா். ஜெயின் பவனில் பாடல்களை பாடினா்.

Advertisement

இதையடுத்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சமய்சிங் மீனா தொடங்கி வைத்தாா். இதில், ஜெயின் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments