கள்ளக்குறிச்சி

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆய்வு

Din

சின்னசேலம் பகுதியில் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.507 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்யும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி, ஜூலை 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டாா்.

பூண்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.32 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தாா். அம்மையகரம் கிராமத்தில், ஒருங்கிணைந்த பணிகள் வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், இலங்கை தமிழா்களுக்காக ரூ.507 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து பேருந்து நிலையம் விரிவாக்கம், சாலை அகலப்படுத்துதல், பயணியா் நிழற்குடை அமைத்தல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT