திருட்டு முயற்சி: ஒருவா் கைது
வி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் பழனிமுத்து (52). இவா், தனது வீட்டின் முன் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், வெள்ளிக்கிழமை அதிகாலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டை ஒருவா் உடைத்துக் கொண்டிருந்தாா். உடனே, அவரைப் பிடித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் பழனிமுத்து ஒப்படைந்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், காடையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மகன் யோகிதாஸ் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.