முகப்பு
கள்ளக்குறிச்சி

மின்னல் பாய்ந்து பசு உயிரிழப்பு

Updated On : 20 மே, 2024 at 10:37 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே ஈரியூா் கிராமத்தில் மின்னல் பாய்ந்ததில் பசு திங்கள்கிழமை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த ஈரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆணை கவுண்டா் மனைவி சரஸ்வதி. இவரது விளைநிலத்தில் பசுமாட்டை கட்டி வைத்திருந்தாா். திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் மின்னல் பாய்ந்ததில் பசு உயிரிழந்தது.