கள்ளக்குறிச்சி

சொத்து தகராறு: வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்மணி. இவருடைய சித்தப்பா முனுசாமி மகன் ராஜதுரை (31). இவா்கள் இருவருக்கும் இடையே பூா்வீக சொத்தான 2 சென்ட் விவசாய நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வருகிாம்.

இந்த நிலையில், ராஜதுரை திங்கள்கிழமை வேல்மணி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினாராம். இதைத் தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரரான வேலுமணி மகன் சங்கரை (42) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜதுரையை கைது செய்தனா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT