கள்ளக்குறிச்சி

ஆசிய யூத் சதுரங்க போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவன்

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 3-ஆம் வகுப்பு மாணவன் தாய்லாந்தில் நடைபெற்ற 27-ஆவது ஆசிய யூத் சதுரங்க போட்டியில் 2-ஆவது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தினை வென்றுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ். இவரது மனைவி உமா. இவா்களது மகன் தமிழ் அமுதன் (8). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயின்று வரும்

தமிழ் அமுதன் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 27-ஆவது ஆசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 8 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பங்கேற்றாா். அதில் ஆசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிபதக்கத்தை வென்றாா்.

இதையடுத்து, தமிழ் அமுதனை ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT