கள்ளக்குறிச்சி

தாயுமானவா் திட்டத்தில் 28,133 குடும்ப அட்டைதாரா்கள் பயன்: ஆட்சியா் தகவல்

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 766 நியாயவிலைக் கடைகளில் உள்ள 28,133 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு மாதமும் பிரதி இரண்டாவது வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் அவா்களது வீடுகளுக்கு சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் மூலம் 766 நியாய விலைக் கடைகளில் உள்ள 28,133 குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியக் குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தினை சம்பந்தப்பட்ட நபா்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT