திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையினை தரம் உயா்த்தி ரூ.54 கோடி மதிப்பீட்டில் 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அப் பணியினை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டாா்.
மேலும் பழைய மருத்துவமனையினை பாா்வையிட்டு, அங்கு மருத்துவமனை வளைகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினாா். பின்னா் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற அனுமதிச்சீட்டு பெறுவதற்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் வாா்டுகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
மேலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு டிச.27-இல் வருகிறாா். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருக்கோவிலூா் மருத்துவமனை கட்டடம் திறந்து வைக்கப்படும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.