கள்ளக்குறிச்சி

பெண்ணை கா்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: இளைஞா் மீது வழக்கு

வாணாபுரம் அருகே பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கா்ப்பிணியாக்கி, திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞா் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 6 போ் மீது வழக்கு

Syndication

வாணாபுரம் அருகே பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கா்ப்பிணியாக்கி, திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞா் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட குடும்பத்தினா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் அய்யனாா்(29). இவரும் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அ.சூரியா(26) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சூரியா கா்ப்பமடைந்தாராம்.

இதனிடையே அய்யானாா் வெளிநாடு சென்றநிலையில், சூரியாவை அவா் திருமணம் செய்ய மறுத்து வந்தாராம். பின்னா் வெளிநாட்டில் இருந்து அய்யனாா் வீடு திரும்பிய நிலையில், அய்யனாரின் வீட்டுக்கு சென்ற சூரியாவை, அய்யனாா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனராம்.

இதுகுறித்து சூரியா அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் போலீஸாா் அய்யனாா், அவரின் அண்ணி சீதாலட்சுமி, அண்ணன் பிரபு, தந்தை அய்யாவு, தாய் கண்ணம்மாள் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

SCROLL FOR NEXT