கள்ளக்குறிச்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான 14 பள்ளி விடுதிகளும், 4 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கான 9 பள்ளி விடுதிகளும் என மொத்தம் 27 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் மூன்று வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும்.

10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு, நுழைவுத்தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளி விடுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

SCROLL FOR NEXT