கள்ளக்குறிச்சி

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தையொட்டி பேருந்துகளில் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Syndication

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் கலந்துகொண்டோா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

குழந்தைகள் தொடா்பான ஏதேனும் பிரச்னைகள் பொதுமக்கள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக குழந்தைகள் இலவச தொலைபேசி எண் 1098-க்கு தகவலளிக்கும் விளம்பர ஒட்டுவில்லையை அரசு பேருந்துகளில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஒட்டினாா்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஏ.இளையராஜா, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

அல்கராஸ் ‘நம்பா் 1’

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு

வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கலாமா? முழு விவரம்!

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை - ட்ரோன் தாக்குதல்

SCROLL FOR NEXT