கள்ளக்குறிச்சி

திமுக கூட்டணியில்தான் தவாக உள்ளது: தி.வேல்முருகன்

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது என அந்தக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

Syndication

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளது என அந்தக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினா் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் (தவாக) இணையும் நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சுமாா் 500 போ் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து தி.வேல்முருகன் அவா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றுப் பேசினாா்.

பின்னா், அவரிடம் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கண்டிப்பாக கேட்டுப் பெறுவோம். கொடுக்க வேண்டிய இடத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்ளாா். உரிய இடங்களை எங்களுக்குத் தருவாா் என நம்புகிறோம் எனத் தெரிவித்தாா் தி.வேல்முருகன்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT