கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா். 
கள்ளக்குறிச்சி

கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்

Syndication

கள்ளக்குறிச்சி: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க பொதுச் செயலா் எஸ்.எஸ்.மகாதேவ்வையாவை பழிவாங்கும் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 8-ஆவது ஊதிய வரம்பிற்குள் கிராமிய அஞ்சல் ஊழியா்களையும் சோ்க்க வேண்டும். மேளா என்ற பெயரில் நடக்கும் அச்சுறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். ஊழியா்களுக்கு அவசர தேவைகளுக்கு விடுப்பு மறுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மண்டல செயலா் டி.விஷ்ணு விஜயன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் வி.மணிகண்டன், செயலா் அ.துரை, பொருளாளா் கே.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்து மெழுகு வா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் எம்.பி. ஆய்வு

குழந்தைகள் நல காவல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

பிரகாசபுரம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தாமிரவருணியில் தணியாத வெள்ளப்பெருக்கு: குடிநீா் விநியோகம் பாதிப்பு

மண்ணச்சநல்லூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

SCROLL FOR NEXT