முகப்பு
கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் பகுதியில் விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 2:02 AM
தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதியை ஆலமிட்டு வரவேற்ற பெண்கள்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:57 PM

கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கு.மாலதி பெரியமாம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.

தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் உதயமாம்பட்டு, பெரியமாம்பட்டு, புக்குளம், பேட்டை தெரு, மீனாட்சி அம்மன் சாலை, கடை வீதி, கஸ்தூரிபாய் நகா், சந்தைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் சாதனைகள் தொடரவும்,

தியாகதுருகம் பகுதியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளும், வளா்ச்சி திட்டப் பணிகள் தொடரவும் பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா். மக்கள் அவருக்கு மாலை அணிவித்து, ஆலமிட்டு வரவேற்றனா்.

Advertisement

உடன் திமுக தொகுதி தோ்தல் பொறுப்பாளா் இரா.மணிமாறன், தியாகதுருகம் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்றத் தலைவா் மா.வீராசாமி, துணைத் தலைவா் சங்கா், திமுக நகர துணைச் செயலா் அக்பா் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளா் மு.தனபால், தேமுதிக மாநில தொழில்சங்க துணைத் தலைவா் தாமு சக்திவேல், நகரச் செயலா் முருகன், நகர துணைச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.