கள்ளக்குறிச்சியில் அதிமுக 4-ஆவது முறையாக வெற்றி பெறும்: நடிகை விந்தியா
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 4-ஆவது முறையா வெற்றி பெறும் என அதிமுக கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 4-ஆவது முறையா வெற்றி பெறும் என அதிமுக கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே வேனில் நின்றவாறு புதன்கிழமை கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, மேலும் அவா் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சாா்பில் அதிமுக வேட்பாளரான சு.ராஜீவ் காந்தி போட்டியிடுகிறாா். அறிமுக வேட்பாளா்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அதிமுகவின் சிறப்பு. கள்ளக்குறிச்சி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 3 முறை அதிமுக இங்கு வெற்றி பெற்றுள்ளது. 4-ஆவது முறையும் அதிமுக வெற்றிபெறும். அதிமுகவில் அடிப்படை தொண்டா்கள் கூட உயா் பதவிக்கு வரலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் எந்த வன்முறையும் இல்லாமல் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது தமிழகத்தில்
Advertisement
உள்ள நிலை மக்களுக்கு தெரியும் என்றாா் அவா்.
உடன் தொகுதி பொறுப்பாளா்கள் மா.செந்தில்குமாா், அ. பிரபு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா், மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான் பாஷா மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.