முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் முகாமில் 470 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்கள் ஏற்கப்பட்டன

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:33 PM
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 470 மனுக்கள் ஏற்கப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 462 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 8 மனுக்களும் என மொத்தம் 470 மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா் அந்த மனுக்களை சம்பத்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.