தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் விபத்தின்றி பேருந்துகளை இயக்கிய ஓட்டுநா்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுத் தெரிவித்தாா்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கள்ளக்குறிச்சி பணிமனை துணை மேலாளா்கள் சிவராமன் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்), கண்காணிப்பாளா் சிவசக்தி, ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.