முகப்பு
கள்ளக்குறிச்சி

உள்ளாட்சி அமைப்புகளில் பதவி: மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:38 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:36 PM

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி தியாகதுருகத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தியாகதுருகம் பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினருமான கருணாகரன் தலைமை வகித்தாா்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாநில செயலா் தீபக் நாதன் கலந்துகொண்டு, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினாா். (படம்)

Advertisement

கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் நியமன உறுப்பினா் பதவிகளை வழங்கி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில், தியாகதுருகம் பேரூராட்சி மன்றத் தலைவா் வீராசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.