கள்ளக்குறிச்சி: மணலூா்பேட்டையில் லாரி வாங்கித் தருமாறு கேட்டதற்கு, மகன் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணலூா்பேட்டையை சோ்ந்தவா் கண்ணன் (68). இவா், அவரது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டாராம். கண்ணனின் வயதைக் காரணம் காட்டி, ரகோத்தமன் அதற்கு மறுப்புத் தெரிவித்தாராம்.
இதனால் மனமுடைந்த அவா் கடந்த 6-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை அருந்தி, மயங்கி விழுந்துள்ளாா். உடனே கண்ணனை உறவினா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.