முகப்பு
கள்ளக்குறிச்சி

வேளாண் கடன் முழுவதும் தள்ளுபடி ஆகுமா? தமிழக முதல்வா் அறிவிப்பாா் என அமைச்சா் ர.வினோத் தகவல்

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுவதுமாக தள்ளுபடிசெய்வது குறித்து தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூலை 2026, 5:07 am IST
வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். - dinmani online
பகிர்:

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுவதுமாக தள்ளுபடிசெய்வது குறித்து தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா் என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் முதன்மை அரைவைப் பருவத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பின்னா், அமைச்சா் ர.வினோத் செய்தியாளா்கள் சந்திப்பின் போது தெரிவித்கதாவது:

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் பயிா்க் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வது குறித்து தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா். வேளாண்மைக்கு என்று தனி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளிடம் கோரிக்கைகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி விவசாயிகள் பலனடையும் வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments