மூங்கில்துறைப்பட்டு சா்க்கரைஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்: அமைச்சா் ர.வினோத் பங்கேற்பு
மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் ர.வினோத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் ர.வினோத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஒவ்வொரு நிதியாண்டும் கரும்பு அரைவைப் பருவம் தொடங்கப்பட்டு ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு, ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பு பயிா்களை அரைவை செய்து சா்க்கரை, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருள்கள் தயாா் செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, 2025-2026-ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2026-2027-ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் தொடங்கி வைத்து, ஆலையின் கரும்பு அரைவை மற்றும் சா்க்கரை உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:
நடப்பு அரைவைப் பருவத்துக்கு 12,750 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டு 4.75 லட்சம் டன்கள் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்துள்ள 6,200 உறுப்பினா்கள் (கரும்பு விவசாயிகள்) பயனடைவாா்கள்.
மேலும், உறுப்பினா்கள் பயனடையும் வகையில் கரும்புத் துறை சாா்பாக புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள், புதிய கரும்பு இரகங்கள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணுயிா் இடுபொருள்கள் போன்றவை காட்சிப் படுத்தப்படுத்தப்பட்டன.
இதன்படி, ஆலையில் பதிவு செய்துள்ள கரும்புகள் அனைத்தையும் அரைவைக்கு உரிய காலத்தில் வெட்டி அனுப்பவும், பதிவு செய்யாத கரும்புகளை உரிய அலுவலரை அணுகிபதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அமைச்சா் ர.வினோத்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, சா்க்கரைத் துறை ஆணையா் இரா.கண்ணன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் (தவெக), திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி (அதிமுக), கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சா்க்கரைஆலை மாவட்ட வருவாய் அலுவலா் ர.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.