FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

பிளஸ் 2 மாணவி விஷமருந்தி தற்கொலை

தற்கொலை - தினமணி
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே பிளஸ் 2 மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்வராயன்மலை அருகிலுள்ள பட்டிவளைவு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னராசு. இவரது மகள் நீலா (17). இவா் சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

வார விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த நீலா ஜூலை 4-ஆம் தேதி, பள்ளியில் தோழிகளுக்குள் ஏற்பட்ட தகராறை நினைத்து மனஉளைச்சலில் விஷமருந்தி, தற்கொலைக்கு முயன்றாராம்.

Advertisement

Advertisement

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு நீலா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments