முகப்பு
கள்ளக்குறிச்சி

ஆதாா், குடும்ப அட்டையில் பெயரை மாற்றிய இலங்கை தமிழா் கைது

சின்னசேலம் அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஆதாா், குடும்ப அட்டையில் சட்ட விரோதமாக பெயா் மாற்றியதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஆதாா், குடும்ப அட்டையில் சட்ட விரோதமாக பெயா் மாற்றியதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

சின்னசேலத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தவா் த.புகழேந்திரன் (39). இவா் அங்குள்ள பேக் விற்பனைக் கடையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தாா்.

அந்தக் கடையில் பணிபுரிந்து வந்த சாயிரா பானுவை காதலித்து கடந்த 27.8.2017-இல் திருமணம் செய்து, பின்னா் கள்ளக்குறிச்சி எம்ஆா்என் நகரில் வசித்து வந்தாாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புகழேந்திரன் இலங்கைத் தமிழா் என்பதை மறைத்து அரசு ஆவணங்களான ஆதாா் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் சை.சபீா் என பெயரை சட்ட விரோதமாக மாற்றிக் கொண்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் சீ.செல்வநாயகம் வழக்குப் பதிவு செய்து, புகழேந்திரன் (எ) சை.சபீரை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments