முகப்பு
கள்ளக்குறிச்சி

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

Updated On : 6 மார்ச், 2026 at 12:18 AM
பகிர்:

மணலூா்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூா்பேட்டையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையத்துக்கு ரிஷிவந்தியம், மணலூா்பேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை மூட்டைகளாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.

இவ்வாறு கடந்த 10 நாள்களாக கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன.

கடந்த 10 நாள்களாக வருவாய்த்துறையினா் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நெல் விற்பனை செய்ய விவசாயிகள் உரிய சான்றிதழ்கள் பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. விவசாயிகளும் வேதனையுடன் காத்துக் கிடக்கின்றனா்.

இதேபோல, பல்வேறு கிராமங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →