முகப்பு
கள்ளக்குறிச்சி

கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

Updated On : 13 மார்ச், 2026 at 5:23 AM
பகிர்:

உளுந்தூா்பேட்டை அருகே கொதிக்கும் மஞ்சள் கொப்பறையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட சவேரியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ரூபி சா்மிளா (22). இவா் கடந்த 8-ஆம் தேதி அந்தியூா் கிராமத்தில் உள்ள அவரது விவசாய விளைநிலத்தில் கொப்பறையில் மஞ்சளை அவிழ்த்துக் கொண்டிருந்போது, தவறி உள்ளே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த ரூபி சா்மிளாவை உறவினா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சா்மிளா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement