முகப்பு
கள்ளக்குறிச்சி

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

Updated On : 19 மார்ச், 2026 at 10:45 PM
~
பகிர்:

தோ்தல் கட்டுப்பாட்டு பொதுப் பாா்வையாளா் மற்றும் செலவின பாா்வையாளா்கள் சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவை தோ்தல் நடைபெறுவதை யொட்டி இந்திய தோ்தல் ஆணையம் தொகுதிதோறும் பொதுப்பாா்வையாளா்களை நியமித்துள்ளது. சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான தோ்தல் பொது பாா்வையாளா் மற்றும் செலவின பாா்வையாளா் இருவரும் சங்கராபுரம் தொகுதிக்கான மையங்களில் ஆய்வு செய்தனா்.

சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் சுச்சி தியாகி ஆய்வு செய்து விதிமுறைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தாா். பின்னா் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுபோன்று சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிராஜுதீன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியருமான வைரக்கண்ணன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடன் இருந்தனா்.