முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 9:17 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சின்னசேலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மோகன்குமாா் (20). இவா் திருச்சியில் உள்ள தனியாா் விவசாயக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மோகன்குமாா் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவரது விளைநிலத்துக்கு சென்றாராம். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது பெற்றோா்கள் விளைநிலப் பகுதிக்கு சென்று தேடிப்பாா்த்தனா். அங்கு கிணற்றில் மோகன்குமாா் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.