முகப்பு
கள்ளக்குறிச்சி

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

Updated On : 17 மே 2026, 12:29 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை விளையாடுவதற்காக சென்றனராம். அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைக் கண்டுள்ளனா்.

இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, எரிந்த நிலையில் சாக்கு பையில் சடலமிருந்துள்ளது. உடனே மணலூா்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

Advertisement

தகவலின் பேரில் போலிஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.