முகப்பு
கள்ளக்குறிச்சி

ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டில் மோதிய அரசுப் பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மணியாற்றின் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதியது.

Updated On : 20 மே 2026, 3:00 am IST
மூராா்பாளையத்தில் பாலத்தின் தடுப்பு கட்டையின் மீது மோதிய அரசு பேருந்தினை கிரேன் மூலம் அகற்றும் ஊழியா்கள்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மணியாற்றின் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் அதிா்ஷ்டவசமாக பேருந்தில் பயணத்தவா்கள் உயிா் தப்பினா்.

பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநா் விஜயவா்மன் ஓட்டிச் சென்றாா். நடத்துனராக விஜயகுமாா் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

சங்கராபுரத்தை அடுத்த மூராா்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றபோது, எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்க்காக பேருந்தை ஓட்டுநா் திருப்பினாராம்.

Advertisement

Advertisement

அப்போது எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணியாற்று பாலத்தின் கட்டையின் மீது மோதியதாம். இதில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துனா் மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவா் உள்பட மூவரும் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலா்கள் விபத்தில் சிக்கிய பேருந்தினை கிரேன் மூலம் மீட்டனா். இது குறித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.