புதுச்சேரி

காச நோய் ஒழிப்பு: ஜிப்மர் மருத்துவமனை குழுவுக்கு விருது

DIN

காச நோய் ஒழிப்புக்கு சேவை புரிந்தமைக்காக ஜிப்மர் மருத்துவமனை குழுவுக்கு தெற்காசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் 1200 காசநோயாளிகள் கண்டறிப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காசநோய் மருந்து பெற அனுப்பப்படுகின்றனர். ஆனால், பரிந்துரைக்கப்படும் அனைத்து நோயாளிகளும் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை.
இந்த சூழ்நிலையை மாற்ற தேசிய தடுப்பு திட்டம் பல்வேறு யுக்திகளை கொண்டு ஆராய்ந்து வருகிறது.
இதற்காக ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூகத் துறை பேராசிரியர் கெளதம்ராய் தலைமையிலான மருத்துவக் குழு ஜிப்மர் நுரையீரல் சிகிச்சை துறையுடன் இணைந்து கள ஆராய்ச்சியை மேற்கொண்டது.
காசநோய் கண்டறியப்பட்ட நோயாளி தனது வசிப்பிடத்தின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்னர், வாரத்துக்கு இரண்டு முறை தொடர்பு கொள்ளப்பட்டு, சிகிச்சையை தொடங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்.
இதன் மூலம் அந்த நோயாளிக்கு சிகிச்சை தொடங்கியது உறுதி செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையில் கடந்த காலத்தை விட அதிக நோயாளிகள் உடனடி சிகிச்சையை மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. இதற்காக தெற்கு ஆசிய விருது-2016 ஜிப்மர் மருத்துவ மாணவர் கில்பர்ட்டுக்கு புதுதில்லியில் சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற மருத்துவக் குழுவை ஜிப்மர் இயக்குநர் பரிஜா பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT