புதுச்சேரி

சைபர் கிரைம் தொடர்பான பயிற்சி நிறைவு

DIN

புதுவை காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கான சைபர் கிரைம் விசாரணை தொடர்பான பயிற்சி முகாம் கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் 5 நாள்கள் நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கிய பயிற்சி முகாமில் ஹைதராபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாதெமி உதவி இயக்குநர் விமலா ஆதித்யா, ஆலோசகர் விக்ரம் குமார், திட்ட உதவியாளர் விஜின் சந்திரன், பொறியாளர் வினய் ஜெயின், ஹரிப் அலிகான் உள்ளிட்டோர் சைபர் கிரைம் விசாரணை குறித்த பயிற்சியை அளித்தனர்.
இதன் நிறைவு விழாவில் முதுநிலை எஸ்.பி. (தலைமையகம்) ஏகே.கவாஸ் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர், பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் வரவேற்றார். புதுவை காவல் துறையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT