புதுச்சேரி

மருத்துவமனையில் பெண் சாவு: சடலத்தை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக போராட்டம்

தினமணி

பாகூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சேதராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமார் இவரது மனைவி பூபேஷினி (36). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 இந்த நிலையில், பூபேஷினிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பூபேஷினியை அவரது உறவினர்கள், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பூபேஷினியின் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததே இறப்பிற்கு காரணம். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி பூபேஷினியின் உடலை வாங்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுôர் சாலையில் மருத்துவமனையின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
 தொகுதி எம்.எல்.ஏ., தனவேலு தலைமையில், பூபேஷினியின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திங்கள்கிழமை பூபேஷினியின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இது குறித்து அறிந்த கிருமாம்பாக்கம் காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வம், உதவி ஆய்வாளர் தன்வந்திரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 போலீஸாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனிடையே, சம்பவ இடத்துக்கு வந்த தனவேலு எம்.எல்.ஏ., பூபேஷினியின் குடும்பத்தினரை அழைத்துச் சென்று, மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் புதுச்சேரி- கடலுôர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT