புதுச்சேரி

எழுத்தாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தினமணி

புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 கவிமுகில் அறக்கட்டளை (சென்னை) சார்பில், ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய நூல்களையும் (கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம்) எழுத்தாளர்களையும் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது.
 அதன்படி, நிகழாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது புதுச்சேரி இருமொழி எழுத்தாளர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பி.ராஜா என்ற பெயரில் ஆங்கிலத்திலும், இருபத்தைந்து ஆண்டுகளாக ராஜ்ஜா என்ற புனைபெயரில் தமிழிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை, புத்தக விமர்சனம, நாடகம், நாவல் எழுதி வருகிறார்.
 புதுச்சேரி மாநில அரசுக் கலைக் கல்லூரிகளில் நாற்பது ஆண்டுகளாக ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்று ஓய்வு பெற்ற இவர், ஆங்கிலத்தில் 32 நூல்களும், தமிழில் 15 நூல்களும் எழுதியுள்ளார்.
 சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கவிமுகில் இலக்கிய விருதை ராஜாவுக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார். கோவை ஞானி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT