புதுச்சேரி

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

தினமணி

புதுவை காமராஜர் நகர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ம.அன்பழகன் தலைமை வகித்தார். சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், பொதுமக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினார். கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் சங்கர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் பாலன், சண்முகம், பி.அன்பரசன், கோபாலன், கணேஷ், தேவா, கலா, விண்ணரசி, மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 இன்று சிறப்பு வழிபாடு: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை (ஜூன் 19) மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, தங்கத் தேர் இழுக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 விழாவுக்கு மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகிக்கிறார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT