புதுச்சேரி

தொழில்சாலைகளுக்கான உரிமம் ஆன்-லைனில் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்

தினமணி

இந்தியா விலேயே முதல்முறையாக தொழில்சாலைகளுக்கான உரிமம் மற்றும் வரைபட ஒப்புதல்களை ஆன்-லைன் மூலம் வழங்கும் திட்டத்தை, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
 புதுச்சேரி மாநிலத்தில் தொழில்சாலைகள் தொடங்குவதற்கு உரிமம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கும், விரைவாக உரிமம் வழங்குவதை உறுதி செய்வதற்கும் தொழிலாளர் துறை மற்றும்
 தேசிய தகவல் மையத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழில்சாலைகளுக்கான உரிமம் மற்றும் வரைபட ஒப்புதல்களை ஆன்-லைன் மூலம் வழங்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
 இதனை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தொடக்கிவைத்தார். அமைச்சர் கந்தசாமி, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 அப்போது முதல்வர் நாராயணசாமி பேசுகையில்: புதுச்சேரியில் தொழில் தொடங்குவோர் அரசை ஏமாற்றாமல் வரி கட்ட வேண்டும்.
 மேலும், மக்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக 74 ஆன்-லைன் சேவை மூலம் வழங்க உள்ளோம் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT